அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலே உடனடியாக நடத்தப்பட வேண்டும் – மகிந்த வெளியிட்டுள்ள அதிரடி

அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனமல்வில பிரதேச சபைக்கு நேற்று விஜயம் செய்த அவர், அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இதனைக் கூறியுள்ளார்.

அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும்.

வேறெந்த தேர்தலையும் நடத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த முயற்சிகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.