Home சர்வதேச செய்தி நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம்!

நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம்!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 10.35 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டிலும் நேற்று இரவு 8.45 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.