Home சமூக சீர்கேடு சீதுவ பகுதியில் போதைப்பொருள் விருந்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பெண்களும் 3 ஆண்களும் கைது!

சீதுவ பகுதியில் போதைப்பொருள் விருந்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பெண்களும் 3 ஆண்களும் கைது!

சீதுவ பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் போதைப்பொருள் விருந்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டுப்பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஐந்து பெண்களும், மூன்று ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் களியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போதைப்பொருள் அருந்தி தெளிவான மனநிலையில் இல்லாத நிலையிலே கைதுசெய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது

அத்துடன் அவர்களிடமிருந்து 30 போதைப்பொருள் வில்லைகள், 270 மில்லிகிராம் ஹெரோயின், 24 கிராம் கஞ்சா என்பனபொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கைதுசெய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.