மருத்துவமனையில் சுரேஷ் ரெய்னா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்த சுரேஸிஜ் ரெய்னா கடந்த 2 ஆண்டுகளாகவே காயம், உடல் தகுதியின்மை, ஃபார்ம் அவுட் போன்ற காரணங்களால் அணியில் இடம் பிடிக்க முடியாமல் அவஸ்தையடைந்து வருகிறார்.

இதனால் உள்ளூர் போட்டியான ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக முழங்கால் பிரச்சனையால் அவஸ்தையடைந்து வந்த சுரேஷ் ரெய்னாவிற்கு, ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 4 அல்லது 6 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.