Home புலனாய்வு செய்தி தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிக்கும் புலனாய்வு அதிகாரிக்குமிடையில் இப்படி ஒரு தொடர்பா? – திடுக்கிடும் தகவல்கள்...

தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிக்கும் புலனாய்வு அதிகாரிக்குமிடையில் இப்படி ஒரு தொடர்பா? – திடுக்கிடும் தகவல்கள் கசிவு


உயிர்த்தஞாயிறு தாக்குதலில் தெஹிவளையில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலில் பலியான தற்கொலைதாரி ஜமால்தீன் என்பவர் முஸ்லிம் தீவிரவாதிகளை விசாரிக்கும் பொலிஸ் கியூ பிரிவில் பணியாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவருடன் இணைந்து அரபு மொழியை கற்றதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் குறித்த புலனாய்வு அதிகாரி குருநாகலில் உள்ள சஹ்ரான் மனைவி வசித்த வீட்டுக்கு சென்று வந்தமை தெரிய வந்துள்ளது.

காத்தான்குடி சாய்ந்தமருது பகுதியில் கடந்த ஏப்ரல் 26 அன்று வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள், குறித்த புலனாய்வு அதிகாரி சென்ற குருநாகல் வீட்டில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

சஹ்ரான் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலை புலனாய்வு கியூ பிரிவு கண்டுபிடித்திருந்தாலும், ஜமால்தீனும் இந்த தீவிரவாத குழுவுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

எனவே, விசாரணையில் ஈடுபட்ட குறித்த புலனாய்வு அதிகாரி தன்னுடன் அரபு மொழியை கற்ற தற்கொலைதாரியின் நடவடிக்கைகளை அறிந்திருக்கவில்லை என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.