புரட்சிகரமான மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காக தான் நான் நியமிக்க பட்டிருக்கிறேன்!

வரலாற்று சிறப்பு மிக்க மாநாட்டின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியன் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமித்தமை தொடர்பில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றி தெரிவிப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புரட்சிகரமான மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தான் நாட்டை நேசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு எதிர்பகாலத்தில் தேவையான ஒரு தலைவரை வழங்க தயாராக இருப்பதாகவும் எப்பொதும் எல்லைகளுக்கு உட்பட்டு சேவை செய்வதில்லை எனவம் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டின் இறையாண்மையில் கைவைக்க யாரிற்கு இடமளிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிற்கு நாட்டை நேசிக்கும் தலைவர் ஒருவர் வேண்டும் எனவும், ஜனாதிபதி ஒருவரிடம் இருந்து மக்கள் இதனையே எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை அமைத்த பின்னர் முதலாவதாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இலங்கையை பாதுகாப்பான நாடாக அமைக்க முடியும் என தான் நம்புவதாகவும் எதிர்கால தலைமுறைக்காக பாதுகாப்பான நாட்டை ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய தனது அரசாங்கத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.