20 மாடி கட்டிடத்தில் இருந்து மகளை தள்ளிவிட்டு கொன்ற மொடல்!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிரபல மொடல் ஒருவர் 20 மாடி கட்டிடத்தின் மேலே இருந்து மகளை தள்ளிவிட்டு கொன்ற பின்னர் தாமும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 32 வயதான ஜோதி மலானி என்பவரே தற்கொலை செய்துகொண்டவர்.

20 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மேலே இருந்து 7 வயது மட்டுமேயான தமது மகளை தள்ளிவிட்ட பின்னர் அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெங்களூருவின் ஜே.பி நகரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த தற்கொலை சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

சம்பவத்தன்று கணவர் பங்கஜ் சுல்த்தானியுடன் ஜோதி வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பங்கஜ் தமது சகோதரரின் குடியிருப்புக்கு சென்றுள்ளார். பங்கஜ் குடியிருப்பில் இருந்து வெளியேறிய பின்னர், மகளை கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஜோதியின் சகோதரரின் புகாரை அடுத்து பங்கஜ் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

32 வயதான ஜோதி மலானி மிஸ் பெங்களூரு பட்டம் வென்றவர் மட்டுமின்றி, பிரபல மொடலாகவும் செயல்பட்டு வருகிறார்.