இரண்டு துண்டாக ஸ்ரீலங்கா உடைந்த சுதந்திரக் கட்சி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டின் பின்னர் கட்சி ஓர் சரியான தலைவரை தெரிவு செய்யத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமைப் பொறுப்பினை மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைத்தார் எனவும் அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு வரையில் எதிர்கால தலைவர் ஒருவரை கட்சி உருவாக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் முன்னாள் தலைவர் மஹிந்த வயது முதிர்ந்த, கண் தெரியாத, காது கேளாத சரியாக பேச முடியாதவர்களையே பிரதமர் பதவியில் அமர்த்தினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பிரச்சினைகள் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரி, 2015ஆம் ஆண்டு கட்சியை விட்டு வெளியேற நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எவ்வித அரசியல் அனுபவமும் அற்றவர் எனவும் பிரச்சினைகள் காரணமாகவே இவ்வாறான நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.