துர்கா பெயரை சொல்லி அபியை தூண்டி விட்டு வேலை பார்த்த வனிதா!

முகென் பற்றி அபியிடம் வனிதா தான் தெரிந்து கொண்ட சில விசயங்களைப் போட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

சென்னை: வெளியில் தான் தெரிந்து கொண்ட முகென் பற்றிய ரகசியங்களை அபிராமியிடம் வனிதா போட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார் வனிதா.

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போது எந்தவொரு போட்டியாளருக்கும், தனது சக போட்டியாளர்கள் பற்றி தெரியாது. வீட்டிற்குள் வந்த பிறகு தான் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இதனால் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி மற்றவர்களிடம் எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்களோ அது தான் அவர்களது கேரக்டராக வீட்டினுள் பார்க்கப்படுகிறது.

சினிமா பிரபலங்கள் இதிலிருந்து கொஞ்சம் விலக்கு. காரணம் அவர்களைப் பற்றி மற்றவர்களுக்கு ஏற்கனவே திரைத்துறையில் பரிச்சயம் உண்டு. ஆனால், லாஸ்லியா, முகென் மற்றும் தர்ஷன் போன்றவர்கள் பற்றி மற்றவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. பிக் பாஸ் மூலம் தான் அவர்கள் மக்களிடம் பிரபலமாகியுள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா, மீண்டும் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு திரும்பி வந்துள்ளார். வெளியில் தான் கேள்விப்பட்ட அனைத்து விசயங்களையும் போட்டியாளர்களிடம் ஆர்வமாக பகிர்ந்து வருகிறார். நேற்றைய எபிசோடில் மற்ற போட்டியாளர்களை வாயையே திறக்க விடாமல் அட்வைஸ் என்ற பெயரில் நாம் கேட்க நினைத்த அனைத்து கேள்விகளையும் கொட்டி விட்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று முகெனின் முகத்திரையை கிழிக்கத் தொடங்கியுள்ளார் வனிதா என்பது முதல் புரொமோவைப் பார்க்கும் போதே தெரிகிறது. இதில், அபியிடம் அறிவுரைக் கூறிக் கொண்டு இருக்கிறார் வனிதா. அப்போது, ‘அவன் ஹீரோ ஆகிட்டான். நீ ஜீரோ ஆகிட்ட’ என்கிறார் அவர்.

பின்னர், ‘துர்கா பத்தி அவன் சொல்லி இருக்கானா?’ என அபியிடம் கேள்வி எழுப்புகிறார். வனிதா கூறும் இந்த துர்கா முகெனின் மாமா மகள் ஆவார். சமீபத்தில் இவர் அபிராமி பற்றி ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அதைப் பற்றி பேசத்தான் வனிதா இப்படிக் கூறுகிறார் எனத் தெரிகிறது.

மற்றபடி ஏற்கனவே தனக்கு ஸ்பார்கிள் என்கிற கேர்ள் பிரண்ட் இருப்பதாக முகென் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார். கமல் முன்னிலையில்கூட முகென் இதை வெளிப்படையாக கூறியுள்ளார். அதோடு அபியுடன் தான் நட்பாக மட்டுமே பழகி வருவதாகவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அப்படி இருக்கையில் சம்பந்தமே இல்லாமல் அபியிடம் முகெனைக் கெட்டபிள்ளையாக்க வனிதா முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வந்த உடனேயே இப்டி பத்த வைக்க ஆரம்பிச்சுட்டீயே பரட்ட என வனிதாவை முகென் ஆர்மியினர் திட்டி வருகின்றனர். அபி இது பற்றி முகெனிடம் பேசி தெளிவு படுத்திக் கொள்வது நல்லது என அவர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்