Home உள்ளூர் செய்தி இலங்கையின் முக்கிய இடங்களிற்குள் நுளைந்துள்ள அமெரிக்கா? வெளியான அதிர்ச்சிகர ரிப்போட்

இலங்கையின் முக்கிய இடங்களிற்குள் நுளைந்துள்ள அமெரிக்கா? வெளியான அதிர்ச்சிகர ரிப்போட்

இலங்கை அமெரிக்கா பக்கம் சாய்வது குறித்து வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி- பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை நிலையில்

இந்து சமுத்திரத்திற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு திட்டம் இலங்கையில் நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது என ஜப்பானை தளமாக கொண்ட நிக்கேய் ஏசியன் ரிவியு தெரிவித்துள்ளது.

சோபா உடன்படிக்கையின் கீழ் புதிய பாதுகாப்பு உடன்படிக்கையை இலங்கையுடன் செய்துகொள்வதற்காக அமெரிக்க மேற்கொண்டுள்ள முயற்சிகள் இலங்கையில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஆழமாக பிளவுபட்டகூட்டணியில் அமெரிக்க சார்பு அணிக்கு தலைமை தாங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது அவமானகரமான விடயமாக அமைந்துள்ளது எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் கூட சீற்றமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள நிக்கேய் ஏசியன் ரிவியு தற்போது இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகளை நெருக்கமாக்கினால் அது இலங்கை எதிர்காலத்தில் இராணுவரீதியான போட்டிக்குள் சிக்கிக்கொள்ளும் நிலையைஏற்படுத்தும் என அச்சம் வெளியிட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பிராந்தியத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் பதட்டநிலைகளின் போது நாங்கள் ஒரு பக்கம் சார்ந்திருக்கின்றோம் என்ற கருத்து உருவானால் அது ஆபத்தானது என பெயர் குறிப்பிட விரும்பாத வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இது எங்கள் இராஜதந்திர சாத்தியப்பாடுகளை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் எதிர்காலத்தில் சீனா ரஸ்யா இந்தியா போன்ற நாடுகளும் இவ்வாறான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் படி வேண்டுகோள் விடுக்கலாம் இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவிப்போமா என அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளனார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஏசிஎஸ்ஏ உடன்படிக்கையும் சோபா பேச்சுவார்த்தைகளும் இலங்கையில் அமெரிக்க படையினர் ஆழமாக காலூன்றுவதை நோக்கமாக கொண்டவையே என இலங்கையின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய விடயங்களை அரசாங்கம் இரகசியமாக வைத்துள்ளதால் இந்த உடன்படிக்கைகள் குறித்து மக்களிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட உடன்படிக்கைகயில் புதிய உட்பிரிவுகள் இரகசியமாக புகுத்தப்படுவதால் இந்த உடன்படிக்கை மறைமுக தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

புதிய ஏசிஎஸ்ஏ உடன்படிக்கை முடிவற்றது எப்போதும் தொடரும்,எனவும் தெரிவித்துள்ள இக்பால் அத்தாஸ் சோபா உடன்படிக்கை அமெரிக்க படையினர் சீருடையுடன் ஆயுதங்களை நடமாடுவதற்கான அனுமதியை வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் கூடிய விரைவில் இலங்கையுடன் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு அமெரிக்கா ஆர்வம் காட்டுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2019 தேர்தலிற்கு முன்னர் சோபா உடன்படிக்கையில் கைசாத்திடுவதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவித்துள்ளார் பாத்வைன்டர் மன்றத்தின் பேர்னார்ட் குணதிலக

இதேவேளை எந்த இலங்கை ஜனாதிபதியும் அமெரிக்க நலன்களிற்கு எதிராக நடந்துகொண்டதில்லை என தெரிவிக்கும் சர்வதேச விவகாரங்களிற்கான பண்டாரநாயக்க நிலையத்தின் இயக்குநர் ஹரிந்த விதானகே நாங்கள் எப்போதும் அமெரிக்காவின் நலன்களை கையாண்டுள்ளோம் அரவணைத்து நடந்துகொண்டுள்ளோம், எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை எதிரிநாடாக இலங்கை மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இது எங்களிற்க உதவாது எனவும் தெரிவித்துள்ளார்.