Home உள்ளூர் செய்தி கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய இடம்பெறும் தீவிர முயற்சி நடந்து வருகிறதாம்!

கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய இடம்பெறும் தீவிர முயற்சி நடந்து வருகிறதாம்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளவ ருமான கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யும் முயற்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் நாட்டிற்கான இராணுவ அமைப்பின் சட்டத்தரணி அஜித் பிரசன்ன இதனை தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் இதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டதோடு இந்த முயற்சியை தடுப்பதாகவும் சவால் விடுத்தார்