வாக்குவாதம் முற்றியதால் கோபத்தில் கணவனை 11 முறை கொடூரமாக வெட்டி கொலை செய்த மனைவி!

புனே, – கணவன் மனைவிக்கிடையே எழுந்த வாக்குவாதம் இறுதியில் துயரத்தில் முடிந்தது. கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவி ஆத்திரம் தாங்காமல் கணவனை 11 முறை வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொன்றுள்ளார்.

இச்சம்பவம், மஹாராஷ்டிரா நல்லசோப்ரா எனும் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
காதல் திருமணம் புரிந்துக் கொண்ட சினில் கதம் மற்றும் ப்ரனாலிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருவருக்குமிடையே அடிக்கடி தகறாரு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்நிலையில், அன்றைய் தகாறாரின் போது, அதிகாலை 5 மணிக்கு கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ப்ரனாலி சமையலறை கத்தியை கொண்டு வந்து 11 முறை கணவனை வெட்டியுள்ளார். மேலும் ஆத்திரம் தாங்காமல் அவரின் கழுத்தையும் அறுத்துள்ளார்.

Advertisement

பின்னர் செய்வதறியாது, மாமனார் மற்றும் மாமியாரிடம் தன் கணவர் தற்கொலை செய்துக் கொண்டார் எனக் கூறியுள்ளார். அதை நம்பாத அவர்கள் போலிசில் புகார் வழங்கியுள்ளனர். போலிசார் விசாரணையில், ப்ரனாலி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்