Home சமூக சீர்கேடு கடவத்தை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றி வளைப்பு – 5 பெண்கள் கைது

கடவத்தை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றி வளைப்பு – 5 பெண்கள் கைது

கடவத்தை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு, பெண்கள் மூவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை பேலியகொடை மேல்மாகாண வடக்கு குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மாஹர நீதிவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட சுற்றிவளைப்பு உத்தரவுக்கமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது விடுதியின் முகாமையாளர்களாக செயற்பட்ட இரு நபர்களும் , விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள் எனும் சந்தேகத்தில் 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பெண்கள், கொழும்பு , கடவத்தை , ஹபராதுவ , ஜா-எல மற்றும் எம்பிலிபிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 – 47 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.