பயங்கரவாதம்,மீண்டும் தலைதூக்குவதற்கு எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம்!

பயங்கரவாதமும், அடிப்படைவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கு எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (02) நடைபெற்ற முற்போக்கு தொழிற்சங்கங்களின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,

முற்போக்கு தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் அடிப்படைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எமக்கு கூடுதல் அக்கறையுள்ளன. இதன்காரணமாகவே 30 தசாப்தங்கள் நிலவிய போரை இரண்டரை வருடங்களில் நிறைவுக்கு கொண்டுவந்தோம். எனவே இந்த அரசாங்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எமது ஆட்சியில் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனையற்ற தேசம் நிச்சயம் உருவாக்கப்படும். என்றார்.