Home உள்ளூர் செய்தி மாத்தறையில் வீட்டு அழைப்பு மணியை ஒலிக்கச் செய்து கொள்ளை – CCTV காணொளி உள்ளே

மாத்தறையில் வீட்டு அழைப்பு மணியை ஒலிக்கச் செய்து கொள்ளை – CCTV காணொளி உள்ளே

மாத்தறை – வல்கம சத்தாதிஸ்ஸ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்து கொள்ளையிட்ட நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் முற்பகல் 11 மணியளவில் வீட்டின் முற்பகுதிக்கு வந்த வீட்டு அழைப்பு மணியை ஒலிக்கச் செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து செல்லும் நபர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு வீட்டின் பாதுகாப்பு சுவர் வழியே வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த சுமார் நான்கரை இலட்சம் ரூபாய் பணத்தையும் மற்றும் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் வீட்டினுள் நுழைவது அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.

இந்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

தொலைப்பேசி இலக்கம் – 041 22 22 227 / 071 85 80 200