இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள் இதோ

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள் இதோ

மேஷம் : உடல் ஆரோக்கியம் பலம் பெறும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்று வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டு.

ரிஷபம் : உங்கள் பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம் : சிறு செயலும் கடினமாக தோன்றலாம். பொது விவகாரத்தில் நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம் : கடந்த கால சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம். செயல்களில் முன்யோசனை அவசி யம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

சிம்மம் : சிரமமான சூழ்நிலை மாறி விடும். எண்ணத்திலும், செயலிலும் உத்வேகம் பெறு வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணக்கடன் செலுத்துவீர்கள். உறவினர் களின் வருகை மகிழ்ச்சியை உருவாக்கும்.

கன்னி : உங்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டவரை எதிர்கொள்ள நேரிடலாம். பெருந் தன்மை யுடன் விலகுவதால் நிலைமை சீராகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி ஓரளவு நிறை வேறும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம் : மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். பணச்செலவில் சிக்கனம் வேண்டும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

விருச்சிகம் : உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். பயனறிந்து பேசுவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழிலில் நிலுவைப் பணியை நிறைவேற்றவும். சீரான அளவில் பணவரவு இருக்கும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

தனுசு : சமூகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். வெகுநாள் லட்சியத்தை நிறை வேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். தாராள பணவரவு கிடை க்கும். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம் : உங்கள் பேச்சில் வசீகரம் இருக்கும். புதியவர் நட்புடன் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

கும்பம் : சிரமங்களுக்காக மனம் வருந்த வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கை தரும். அதிக உழைப்பு தொழில், வியாபாரத்தில் புதிய பரிமாணத்தை உண்டாக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம் : அதிக வேலைப்பளு மனதில் சஞ்சலம் தரலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.