Home சமூக சீர்கேடு நீர்கொழும்பு பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் நால்வர் உட்பட ஆறு பேர் கைது!

நீர்கொழும்பு பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் நால்வர் உட்பட ஆறு பேர் கைது!

நீர்கொழும்பு – ஏத்துக்கால் பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் நால்வர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிக சூட்சுமமான முறையில் விபச்சார பெண்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை பல பகுதிகளுக்கு அனுப்பி விபச்சாரத்தில் ஈடுப்படுத்துவதாக பேலியகொட மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் குற்றிப் பிரிவினர் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, பெண்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்து தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்ததின் பேரில் இரு நபர்களும் , விபச்சாரத்தில் ஈடுப்படுபவர்கள் எனும் சந்தேகத்தில் உஸ்பேகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரககஸ்தொட்ட , குருநாகல் , பேலியகொட மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 – 42 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்