Home உள்ளூர் செய்தி மலையகத்தில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளையை காணவில்லையாம்!

மலையகத்தில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளையை காணவில்லையாம்!

வட்டவலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டவலை பிட்டவீன் விக்கடன்
தோட்டபகுதியில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற
மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரனைகளை வட்டவலை பொலிஸார்
ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 09ம் திகதி விக்கடன் தோட்டபகுதியில் சுகயினம் காரணமாக 70வயதுடைய
ராகை என்ற தாயின் சடலம் கானாமல் போயுள்ளமை தொடர்பில்
10.09.2019.செவ்வாய்கிழமை வட்டவலை பொலிஸ் நிலையத்தில் விக்டன்
தோட்டமக்கள் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக வட்டவலை பொலிஸார்
தெரிவித்தனர்.

பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய விசாரனைகளை மேற்கொண்ட வட்டவலை
பொலிஸார் குறிப்பிடுகையில் குறித்த தோட்டபகுதியில் வசித்து வந்த ஏழுபது
வயதுடைய ராகை என்ற தாயை சுகயினம் காரனமாக வீட்டில் இருந்ததாக
தெரியவந்துள்ளது இதே வேளை மகனின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து
வந்நதாகவும் இரண்டு வருடங்களின் பின் வீடு திரும்பிய தாக
தெரிவிக்கபடுகிறது.

தாய் சுகயினம் காரனமாக 09ம் திகதி உயிர் இழந்த நிலையில் காணபட்டதாகவும்
எனது மகனும் கணவரும் இனைந்து சடலத்தை முச்சக்கர வண்டியில் கொண்டு
சென்றதாகவும் இதுவரையிலும் சடலத்தை எங்கு கொண்டு சென்றனர் என்ன
செய்தார்கள் தொடர்பில் இது வரை எனக்கு தெரியாது என இவர்கள் தொடர்பில்
எவ்வித தகவல்களும் இல்லை என மகனின் மனைவியால் வட்டவலை பொலிஸாருக்கு
வழங்கபட்ட வாக்குமுலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த தாயினை மகன் கொலைசெய்து கொண்டு சென்றிருக்கலாம் என தோட்டமக்கள்
குறிப்பிட்டுள்ளனர். குறித்த சடலத்தையும் மகன் மற்றும் பேரபிள்ளையை
பொலிஸார் பொதுமக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது.