Home இந்திய செய்திகள் பயங்கரவாதத்தின் வேர்கள் அண்டை நாட்டில் வளர்க்கப்படுகின்றன – நரேந்திர மோடி

பயங்கரவாதத்தின் வேர்கள் அண்டை நாட்டில் வளர்க்கப்படுகின்றன – நரேந்திர மோடி

பயங்கரவாதம் சர்வதேச பிரச்சினையாக காணப்படுவதுடன், பயங்கரவாதத்தின் வேர்கள் அண்டை நாட்டில் வளர்க்கப்படுகின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் நேற்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பயங்கரவாதம் இன்று ஒரு தத்துவமாக மாறி இருக்கிறது. இது, ஒரு சர்வதேச பிரச்சினையாகவும், உலகளாவிய அச்சுறுத்தலாவும் மாறிவிட்டது. இந்த பயங்கரவாதத்தின் வலிமையான வேர்கள் அனைத்தும் நமது அண்டை நாட்டில் வளர்க்கப்படுகின்றன.

இந்த தத்துவம் மற்றும் பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுப்போருக்கும் எதிராக உலக நாடுகள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுத்திறமையுடன் இருக்கிறோம். ஏற்கனவே இதை நிரூபித்துள்ள நாங்கள் எதிர்காலத்திலும் அதை வெளிப்படுத்துவோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்