Home உள்ளூர் செய்தி மட்டக்களப்பில் 65 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிப்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தின் அவலநிலை!

மட்டக்களப்பில் 65 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிப்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தின் அவலநிலை!

மட்டக்களப்பில் 65 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தனியார் பஸ் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கட்டடம் ஒரு சிறிய மழைக்கே இவ்வாறு வெள்ளத்தில் மிதக்கும் காட்சி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தனியார்பஸ் நிலையம் இன்று காலை 10.00மணிக்கு மாநகரமற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் திறந்துவைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைகமைய குறித்த தனியார் பஸ்தரிப்பு நிலையம் சகல வசதிகளுடன் கூடியதாக இரண்டு மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பஸ்தரிப்பு நிலையம் பிரதமரினால் திறந்துவைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவர் வர முடியாத காரணத்தினால் அமைச்சரும் அதிகாரிகளும்தான் திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது