Home உள்ளூர் செய்தி தம்புள்ளையில் பாடசாலையில் கீழே விழுந்த மாணவன் ஒருவர் உயிரிழப்பு!

தம்புள்ளையில் பாடசாலையில் கீழே விழுந்த மாணவன் ஒருவர் உயிரிழப்பு!

தம்புள்ளையில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவர், நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது. தம்புள்ளை பெல்வேஹர பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பிரபாத் மதுசங்க என்ற மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சக மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

நோயாளர் காவு வண்டியை வரவழைத்து மாணவன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவனுக்கு பிறப்பில் இருந்தே இருதய நோய் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.