Home உள்ளூர் செய்தி ஊழல் இல்லாமல் மக்களின் நலனுக்காக அரசியலில் ஈடுபடுவது மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே!

ஊழல் இல்லாமல் மக்களின் நலனுக்காக அரசியலில் ஈடுபடுவது மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே!

ஊழல் இல்லாமல் மக்களின் நலனுக்காக அரசியலில் ஈடுபடுவது மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ​ஹேரத் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி தலைவர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஏதாவது ஒரு குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளியில் மோதிக் கொள்ளும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பிரதேச சபையினுள் ஒன்றாக இணைந்து திருடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.