Home உள்ளூர் செய்தி ரணிலுக்கு எதிராக கிளப்பிய தேரர்!

ரணிலுக்கு எதிராக கிளப்பிய தேரர்!

கிழக்கு மாகாணம் அம்பாறை பொத்துவில் கரையோரப் பிரதேசத்தில் இலங்கை ஒற்றை ஆட்சி அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை மற்றும் அதனை அண்மித்துக் காணப்படும் புராதன சின்னங்களை இலங்கை நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் பார்வையிட்டுள்ளார்.

இது பௌத்த பூமி என்று கூறிய அத்துரலியே ரத்ன தேரர், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பௌத்த சமயத்தைப் புறக்கணித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.

வெள்ளிக்கிழமை அம்பாறைக்குச் சென்ற தேரர், எழுபத்தியிரண்டு ஏக்கர் காணி பௌத்த விகாரைக்காக அடையாளம் காணப்பட்டிருந்தது என்றும் ஆனால் தற்போது 14 ஏக்கர் காணி மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.