Home யாழ் செய்தி யாழ் செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடந்த மோசமான சம்பவம்!

யாழ் செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடந்த மோசமான சம்பவம்!

யாழ். வடமராட்சி செல்வச்சந்நிதி ஆலய தேர் உற்சவத்தின்போது தங்க ஆபரணங்கள் களவு போயுள்ளதாக ஆலய சூழலில் இருந்த வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

28 முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், சுமார் 40 பவுணுக்கு மேற்பட்டதாக இருக்கும் என்று குறிப்பிட்டனர். சங்கிலி, தாலிக் கொடி என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன.