பாதசாரிகள் கடவையில் மாணவன் மீது மோதிய லொறி – (CCTV) காணொளி

நோர்வூட் பிரதேசத்தில் பாதசாரிகள் கடவையில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (12) லொறியில் மோதி விபத்திற்குள்ளான காட்சி CCTV-இல் பதிவாகியுள்ளது.

விபத்து இடம்பெற்றவுடன் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மாணவரைத் தூக்கி வீதியோரத்திற்கு கொண்டு சென்றார்.

பின்னர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவரைக் கொண்டு சென்ற அம்பியுலன்ஸ் வண்டியொன்று அவ்விடத்தில் நிறுத்தப்பட்டது.

Advertisement

அவ்விடத்திற்கு வந்த இராணுவ அதிகாரிகள் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அவ்விடத்திற்கு நோவூட் பொலிஸார் வந்தனர்.

20 நிமிடங்கள் கடந்தும் மாணவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல எவரும் முன்வரவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

20 நிமிடங்களின் பின்னரே 7 வயதான மாணவர் டிக்கோயா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் தலையில் ஏற்பட்ட உட்காயம் தொடர்பில் ஆராய்வதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், லொறியையும் நோவூட் பொலிஸார் தமது பொறுப்பில் வைத்துள்ளனர்.