Home பிரதான செய்திகள் எழுக தமிழ் நிகழ்வின் ஏற்பாடுகள் குறித்த முழுமையான தகவல் இதோ!

எழுக தமிழ் நிகழ்வின் ஏற்பாடுகள் குறித்த முழுமையான தகவல் இதோ!

எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகள் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்ட தமிழர் உடல்களோடு உடலாக, அனைத்துலக மனித உரிமை கோட்பாடுகளையும், வரையறைகளையும், நியமங்களையும், நம்பிக்கையினையும் சேர்த்தே புதைக்கபட்டுவிட்டதை இன்றளவும் மெய்ப்பிப்பதாகவே தமிழினப் படுகொலைக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.

போர் வலயத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் நீதியைப் பெற்றுத் தருவதில் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாது இருக்கின்றமையானது, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற கூற்றின் வழியே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கான நீதியானது அனைத்துலக நாடுகளின் அரசியல், பொருளாதார, இராஜதந்திர நலன்களை முன்னிறுத்தி தாமதிக்கப்பட்டு வருவதன் வெளிப்பாடேயாகும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திரமாக அமையப்பெற்ற புவிசார் முக்கியத்துவத்தினை தமக்கு சாதகமாக்கி அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுள்ளதோடு தமிழர்கள் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பை முழுவீச்சில் முன்னெடுத்து வரும் இலங்கை அரசிற்கு மேற்கூறப்பட்ட புறநிலையானது மென்மேலும் ஊக்கத்தையே கொடுத்து வருகின்றது.

இவ் நச்சு வட்டத்திலிருந்து எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தமிழர்களாகிய நாம் தேசமாக அணிதிரண்டு ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை நன்குணர்ந்தே தமிழ் மக்கள் பேரவை ‘எழுக தமிழ்-2019’ எழுச்சிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களை ஆரம்பித்திருந்த காலத்தைவிடவும், அதற்கான தேவையும், பரப்பும், நியாயமும் இன்று மிகப் பெரியதாகியுள்ளமையே இவ் எழுக தமிழுக்கான கதவினைத் திறந்துள்ளது.

சரியான நேரத்தில் மிகச்சரியான முனைப்பாக தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் ‘எழுக தமிழ்-2019’ எழுச்சிப் பேரணி அமைந்துள்ளதென்பதை, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் தமிழ்நாடு என தமிழர் பெரும்பரப்பில், யாழ் மண்ணில் நடைபெறும் சமகாலத்திலேயே ‘எழுக தமிழ்’ எனும் பெயரிலேயே ஆதரவுப் பேரணிகள் நடாத்தப்படவிருக்கின்றமை மீள் உறுதிசெய்து நிற்கின்றது.

அத்துடன் ஜெனீவாவிலும் இனப்படுகொலைக்கான நீதி கோரி மாபெரும் எழுச்சிப் பேரணி செப்ரெம்பர் 16 அன்று நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் வெளிப்படும் எழுகையானது தமிழர் பெரும்பரப்பில் மேற்கொள்ளப்படும் நீதிக்கான முன்னெடுப்புகளுக்கு பலம்சேர்ப்பதாக அமையும் என்பதனை இவ் எழுக தமிழ் மீண்டும் எடுத்தியம்பியுள்ளது.

அந்த வகையில் வடக்கு கிழக்கு தழுவி தேசமாக தமிழர்கள் அணிதிரளும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணியானது தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்திர்த்திச் செல்லும் என்ற அடிப்படையில் மாபெரும் எழுச்சி பிரவாகமாக இவ் எழுகதமிழை மேற்கொள்வதற்கான பூரண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு தழுவியதாக தமிழர் தாயகமெங்கும் எழுக தமிழுக்கான ஆதரவு பல்வேறு தளங்களில் இருந்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ் ஆதரவுத் தளத்தினை ஒருங்கிணைத்து எழுக தமிழை பேரெழுச்சியுடன் முன்னெடுக்க ஏதுவாக வடக்கு கிழக்கு தழுவியதான பூரண கதவடைப்பிற்கு எம்மால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கடற்றொழிலாளர்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய தினத்தில் தொழில் நிறுத்தம் செய்யுமாறு சம்மேளனத்தின் சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளன.

தாயகம் தழுவியதாக வருகையினை உறுதிசெய்திருக்கும் அமைப்புகளிற்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. தன்னெழுச்சியாக வருபவர்களையும் எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்கச் செய்யும் வகையில் பொதுவான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இனமான உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் எழுக தமிழ் நிகழ்விற்கு அலைகடலென திரண்டு வருமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.

வாகன ஒழுங்குகள் தொடர்பான விபரங்கள்.

மன்னார் – ராஜா 0767089338

வவுனியா – சிறிதரன் 0777908617, மதன் 076669 1071

வடமராட்சி – சிவகுமார் 0774521392

வடமராட்சி கிழக்கு – காண்டீபன் 0761660414

வலிகாமம் – சரவணன் 0777243129

வலிகாமம் கிழக்கு – உதயகுமார் 0773024487

ஏனைய இடங்களுக்கு மேலதிக விபரங்களுக்கும் – 0760025080

போக்குவரத்து சேவையின் நேரங்களும் வழித்தடங்களும்

பருத்தித்துறை பேருந்து நிலையத்தரில் இருந்து (750 வழித்தடத்தில்)

காலை 7.30 மணி
காலை 8.00 மணி

தொடர்பிற்கு – சிவகுமார் 0774521392

கொடிகாமம் – சாவகச்சேரி – கைதடி ஊடாக யாழ்ப்பாணம்

காலை 7.30 மணி
காலை 8.00 மணி

தொடர்பிற்கு – 0776186554

மாவிட்டபுரம் – சுன்னாகம் – மருதனார்மடம் – கொக்குவில் ஊடாக யாழ்ப்பாணம்

காலை 7.30 மணி
காலை 8.00 மணி

தொடர்பிற்கு – சரவணன் 0777243129

மூளாய் – சுழிபுரம் – சித்தன்கேணி – சங்கானை – மானிப்பாய் – யாழ்ப்பாணம்

காலை 7.30 மணி

தொடர்பிற்கு – சரவணன் 0777243129

கேவில் – ஆழியவளை – உடுத்துறை – வத்திராயன் – மருதங்கேணி குடியிருப்பு வீதிகள் ஊடாக புதுக்காடு – யாழ்ப்பாணம்

காலை 6.00 மணி

தொடர்பிற்கு – காண்டீபன் 0761660414

மருதங்கேணி சந்தி – செம்பியன்பற்று தெற்கு – செம்பியன்பற்று வடக்கு -மாமுனை வடக்கு – மாமுனை சந்தி – நாகர்கோவில் வடக்கு ஊடாக யாழ்ப்பாணம்

காலை 6.30 மணி

தொடர்பிற்கு – காண்டீபன் 0761660414

அம்பன் மருத்துவமனை – பொற்பதி – குடத்தனை வடக்கு – மணற்காடு – வல்லிபுரம் – யாழ்ப்பாணம்

காலை 7.00 மணி
தொடர்பிற்கு காண்டீபன் – 0761660414