உலகில் 80 மில்லியன் மக்களை 36 மணி நேரத்தில் மரணத்திற்கு உள்ளாக்கக் கூடிய கொடூர நோய் பரவும் ஆபத்து!

உலகில் 80 மில்லியன் மக்களை 36 மணி நேரத்தில் மரணத்திற்கு உள்ளாக்கக் கூடிய காய்ச்சல் நோய் தொற்று மீண்டும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“ஸ்பெனிஷ் ஃபுளு” என பெயரிடப்பட்டுள்ள காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பரவியதுடன் உலகில் மூன்று பேரில் ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 50 மில்லியன் பேர் உயிரிழந்தனர்.

தற்போது இந்த வைரஸ் பரவினால், அதனால், பெரிய ஆபத்து ஏற்படும் எனவும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவரின் தலைமையிலான நிபுணர்களின் “உலக தயார் நிலை கண்காணிப்பு குழு” மூலம் இது சம்பந்தமான உலக தலைவர்களுக்கு தெளிவுப்படுத்த விசேட அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். அந்த அறிக்கையில் இந்த ஆபத்து பற்றி கூறியுள்ளனர்.

மிக வேகமாக பரவும் ஆபத்துள்ள இந்த “ஸ்பெனிஷ் ஃபுளு” வைரஸ் மூலம் உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் மரணிக்க செய்யவும் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் தேசிய பாதுகாப்பை சிறிய காலத்திற்கு ஸ்தம்பிக்க செய்ய முடியும் எனவும் தெரியவருகிறது.

உலகம் முழுவதும் பரவி வரும் ஒபேலா வைரஸ் நோயை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் மூலம் “ஸ்பெனிஷ் ஃபுளு” பரவலை தடுக்க முடியாது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த “ஸ்பெனிஷ் ஃபுளு” வைரஸ் குறித்து இதற்கு முன்னர் விடுத்த எச்சரிக்கையை உலக தலைவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நோர்வே பிரதமரும் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளருமான கலாநிதி BRO HARLEM BRUNDTLAND மற்றும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் செயலாளர் ALHADJ AS SY உள்ளிட்ட நிபுணர்கள் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.