அரைநிர்வாண ஆடையுடன் மணமேடையில் – கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி

வெளிநாடு சென்றதுமே நம் பாரம்பரியத்தை பல தமிழர்கள் மறந்து வருகின்றனர் என்பது சமீபகாலமாக குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இதுதொடர்பான பேஸ்புக், டுவிட்டர் பதிவுகள் பலவும் வைரலாகி வருகின்றன.

Rejinold Sudharsan Srs என்பவர் எழுதியுள்ள பதிவில்,

Advertisement

மன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல, கடந்த ஒரு மாத காலமாக அவதானித்த சில அருவருப்பான விடயங்கள் என்று கீழே உள்ள தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

  • திருமண நிகழ்வு ஒன்றில் அரையும் குறையுமாக ஒருத்தி சீலையை கட்டிக்கொண்டு புலிக்கொடியை போத்திக்கொண்டு நடனம் ஆடுறாள்.
  • புலிகளின் தேசிய கீதத்தை போட்டுக்கொண்டு ஒருத்தன் தாலி கட்டுறான்.
  • புலம்பெயர் தமிழர் திருமண நிகழ்வில் மணமகள் – மணமகன் கழுத்தில் தாலிய கட்டினாள்.
  • கடைசியாக இது எல்லாத்தையும் விட ஒருபடி மேல் சென்று மணமேடையில் உள்ளாடையோட நிற்கிறீங்க.

ஈழத்துக்காக போராடுகிறோம் என்று சொல்லி புலம்பெயர் தேசத்தில் உங்களைப் போல் ஒரு கூட்டம்(அனைவரும் அல்ல), இங்கு முள்ளிவாய்க்கால் என்ற சொல்லை கேலியாக பேசும் மற்றுமோர் மூடர் (முதியோர்) கூட்டம். இவை இரண்டிட்கும் நடுவில் பலதையும் இழந்து சில எதிர்பார்ப்புகளுடன் இன்னுமொரு கூட்டம் இருக்கு என்பதை மறந்து விடாதீங்க.

குறிப்பு – “இது என்வீட்டு நிகழ்வு நான் நிர்வாணமாகவும் நிற்பேன், அதை விமர்சிக்க நீ யார்” எனும் நியாயமான கேள்வியையும் நீங்கள் முன்வைக்கலாம். நன்றி ஆனால் “புலி என்ற / ஈழத்து தமிழன் என்ற முத்திரையை உங்கள் ஆடையுடன் சேர்த்து கழட்டி வீசிட்டு நில்லுங்க.” என்று தனது ஆதங்கத்தினை முடித்துள்ளார்.