Home யாழ் செய்தி புகையிரதப் பெட்டிகள் யாவும் கழன்ற நிலையில் சுமார் அரை மணிநேரம் யாழ் நோக்கி வந்த புகையிரதம்!

புகையிரதப் பெட்டிகள் யாவும் கழன்ற நிலையில் சுமார் அரை மணிநேரம் யாழ் நோக்கி வந்த புகையிரதம்!

யாழ் நோக்கி வந்த புயிரதம் ஒன்று புகையிரதப் பெட்டிகள் யாவும் கழன்ற நிலையில் சுமார் அரை மணிநேரம் பயணித்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு தபால் ரயில் புகையிரதத்தில் பயணித்த பயணிகள் அல்லோல கல்லோலப்பட்டனர்.

கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு இரவு தபால் ரயில் புகையிரதம் புறப்பட்டது.

குறித்த புகையிரதம் இரவு 10.15 மணியளவில் வெயாங்கொடை பகுதியில், பெட்டிகள் யாவும் கழன்ற நிலையில் புகையிரத இயந்திரம் மாத்திரம் தனித்து பயணித்துள்ளது.

இதனால் புகையிரத பெட்டியிலிருந்த பயணிகள் மின்துண்டிக்கப்பட்ட நிலையில் தவித்தனர்.

இதையடுத்து அரை மணிநேரம் புகையிரத இயந்திரம் பயணித்த நிலையில் பெட்டிகள் கழன்றதை அறிந்த

இயந்திர சாரதி மீ்ண்டும் புகையிரத இயந்திரத்தை பெட்டிகள் கழன்ற இடத்துக்கு கொண்டு வந்து பெட்டிகளுடன் இயந்திரம் பொருத்தப்பட்டு மீண்டும் புகையிரதம் யாழ்.நோக்கி புறப்பட்டதாக தெரியவருகின்றது.

இதன் காரணமாக காலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் வரவேண்டிய குறித்த புகையிரதம் காலை 8.15 மணிக்கே வந்தடைந்ததனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.