Home விளையாட்டு டோனியின் ஓய்வு குறித்து நெருங்கிய நண்பரும் இந்திய வீரருமான சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார்!

டோனியின் ஓய்வு குறித்து நெருங்கிய நண்பரும் இந்திய வீரருமான சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார்!

டோனியின் ஓய்வு குறித்து நெருங்கிய நண்பரும் இந்திய வீரருமான சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ரெய்னா கூறுகையில், எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை டோனி தான் முடிவு செய்ய வேண்டும்.

அவர் இன்னமும் சிறந்த உடற்தகுதியுடன் உள்ளார், இன்னமும் சிறப்பான விக்கெட் கீப்பரும், மேட்ச் பினிஷர் கூட தான். டோனி டி20 உலக் கோப்பையில் இந்தியாவின் மிகப்பெரிய பொக்கிஷம்.

உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் டோனி முன்னரே துடுப்பாடி இருக்க வேண்டும். பின்னால் பாண்டியா மற்றும் ஜடேஜா இருந்த நிலையில் அவர் பந்த்தை வழி நடத்தி இருப்பார்.

எனினும், கடைசி வரை அவர் போராடினார், குப்தில் மட்டும் ரன் அவுட் செய்யாமல் இருந்திருந்தால் இந்தியா வெற்றிப்பெற்று இருக்கும் என கூறினார்.

சென்னை அணி குறித்து பேசிய ரெய்னா, சென்னை அணியில் பல சிறந்த வீரர்கள் இருந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக விளையாடுவோம். குறிப்பாக எங்கள் அணியில் டோனி உள்ளார் என சிஎஸ்கே-வின் வெற்றி ரகசியத்தை வெளிப்படுத்தினார்.

தான் அணிக்கு திரும்புவது குறித்து கருத்து தெரிவித்த ரெய்னா, இந்தியாவிற்கான நான்காவது துடுப்பாட்டகாரராக நான் இருப்பேன். நான்காவதாக நான் துடுப்பாடி உள்ளேன். எதிர்வரும் இரண்டு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளதாக ரெய்னா கூறினார்.