Home விளையாட்டு இலங்கை அணிக்கு 306 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

இலங்கை அணிக்கு 306 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 306 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அஸாம் 115 ஓட்டங்களையும் பக்ஹர் ஷமான் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெறவிருந்த 1 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

கராச்சி சர்வதேச விளையாட்டரங்களில் இடம்பெறவிருந்து ரத்துச் செய்யப்பட்ட முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அது என்பது குறிப்பிடத்தக்கது.