பொதுஜன பெரமுனவின் மாற்று வேட்பாளராக சமல் ராஜபக்ஷ வேட்புமனு தாக்கல்? மஹிந்தவின் கனவு கலைந்தது

கோட்டாபய ராஜபக்ஷவினால் நிலவும் குழப்பமான சூழ்நிலை காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாற்று வேட்பாளராக சமல் ராஜபக்ஷ வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சில சந்தர்ப்பத்தில் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கான மாற்று விருப்பத்திற்கு செல்ல வேண்டியிருந்தால் அதே நேரத்தில், கோட்டாபய ராஜபக்ஷ தான் பிரதமர் என பெயரிட்டு பிரச்சாரத்தை நடத்த வேண்டும் எனவும் மொட்டின் விளம்பர நிபுணர் குழு கடுமையாக பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மொட்டின் முழு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமும் கோட்டாபய ராஜபக்ஷவை மையமாகக் கொண்டிருப்பதால், அதை முழுமையாக மாற்ற முயற்சிப்பது கூட மிகவும் சாதகமற்றதாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் திட்டம் பல ஆண்டுகளாக வியத் மக, எலிய போன்ற அமைப்புகளின் மூலம் நாட்டில் விளம்பரம் செய்யப்பட்டதுடன், கடந்த இரண்டு மாதத்திற்குள் அவற்றை பெரமுனவின் உத்தியோகபூர்வ கொள்கைகளாக அங்கீகரிக்கப்பட்டு அவரை வேட்பாளராக பெயரிட்டன.

விசேடமாக பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷவின் தேசிய பாதுகாப்பு குறித்து ஈடுபாடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சின் செயலாளராக, கொழும்பின் அலங்காரத்தில் அவரது ஈடுபாடு போன்றவை அவரது வளர்ச்சித் திட்டங்களின் மையமாக இருந்தது.

மறுபுறம், மொட்டு தேசிய பாதுகாப்பை அடிப்படை பிரச்சினையாக அடையாளம் காட்டியுள்ளமையினால் கோட்டாவை சமலுடன் மாற்றுவது ஒரு தோல்வியுற்ற முயற்சி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி, ஜனாதிபதி வேட்பாளருக்கு தடையாக இருந்தாலும், அவர் இல்லாமல் ஜனாதிபதி பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாது என்றும் பிரச்சார நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே ஏதேனும் சட்டரீதியான தடையாக இருந்தால் அடுத்த சில மாதங்களில் அவற்றைத் தீர்த்தது கோட்டாபய பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் மக்களுக்கு வாக்குறுதி அளித்து அவருடைய கொள்கைகளை மேலும் மேம்படுத்துவதைத் தவிர மொட்டிற்கு வேறு வழியில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு ஒப்படைப்பதில் இருந்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்னும் இருப்பது 39 நாட்கள் மட்டும் என்பதால் இந்த காலத்திற்குள் பரிசோதனைக்கு நேரமில்லை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

ஏனென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி குறித்து பொதுமக்கள் வெறுப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதனால் , இதற்கு முன்னர் மொட்டினால் மைத்ரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக உறுதியளிக்கப்பட்ட துணை பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் என அறிவிக்க வேண்டும் என்றும் மொட்டின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.