ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை ஒத்த மற்றொரு தாக்குதல் இலங்கையில் நடத்தப்படலாம் என கடிதம் ஒன்று வெளியாகியுள்ளதா – பகீர் தகவல்

நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை ஒத்த மற்றொரு தாக்குதல் இலங்கையில் நடத்தப்படலாம் என கடிதம் ஒன்று வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இலங்கையில் பாாிய அச்சநிலை தோன்றியுள்ள நிலையில் , உடனடியாக பாதுகப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

Advertisement

குறித்த கடிதத்தில் பல ஹோட்டல்கள் தாக்கப்படலாம் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளதாகவும், அத்துடன் ஏப்பிரல் 21 போன்று மீண்டும் ஹோட்டல்களில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொழும்பு கோட்டை பொலிஸாரால் அனுப்பப்பட்ட கடிதமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பல ஹோட்டல்களிற்கு குறித்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் குறிப்பிட்ட கடிதம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் பொய் தகவல்களை பரப்பி மக்களை குழப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது