நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் தாக்குதல் தொடர்பான வதந்திகளில் உண்மையில்லையாம்!

நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வௌியாகியுள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், வெளியான தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

இத்தகவலை புலனாய்வு பிரிவு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

அத்துடன் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியான வதந்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.