விடுதலை புலிகள் மீளுருவாக்க முயற்சி: இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது

விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மலேசியாவில் இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் பலர் கைது செய்ய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அவர்களை கண்காணித்து மேற்கொண்டுவந்த விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அயோப் கான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் கூறியுள்ளார்.

அந்தவகையில், கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று மேலகாவில் நடந்த LTTE ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்ற அடிப்படியில் முதலில் நெகிரி மாநில அரசியல் தலைவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டாவது நபர் ஒரு மேலகா சட்டமன்ற உறுப்பினர் என்றும் அவரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி மலேசிய தலைநகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய காப்புறுதி முகவர் ஒருவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து 37 வயதுடைய வாடகை கார் சாரதி ஒருவரும் இறுதியாக விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரையும் கைது செய்ததாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் இந்த வருடத்தில் தற்போதுவரை ஜெமா இஸ்லாமிய அமைப்பினைச் சேர்ந்த 284 பேர், ஐ.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 512 பேரும் 25 விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்