யாழில் கோட்டாவுக்கு ஆதரவாக சில புலம்பெயர் தமிழர்கள்!

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரச்சாரங்களை மிக மும்மரமாக நாடு முழுவதும் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

அந்தவகையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தப்பாயவிற்கும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவிற்கு ஆதரவாக யாழிலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபகக்ஷவும் பிரச்சார பணிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நாமலுடன் சேர்ந்து சில புலம்பெயர் தமிழர்களும் கோத்தபாயவிற்காக பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதேவேளை ராஜபக்க்ஷர்களினால் சொல்லொணாத துன்பங்களை தமிழர்கள் அனுபவித்த வடுக்கள் மறையாத நிலையில் புலம்பெயர் தமிழர் சிலர் கோத்தபாயவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளமைக்கு பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.