ரணிலும் பங்காளிக் கட்சியான கூட்டமைப்பும் இணைந்து திறந்து வைத்த விமான நிலையம்!

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்கி­ர­ம­சிங்க நேற்று யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­த­துடன் வடக்கு அபி­வி­ருத்தி அமைச்சினால் மேற்­கொள்­ளப்­பட்டுவருகின்ற அபி­வி­ருத்தித் திட்­டங்­களை பார்­வை­யிட்டார்.

அத்­துடன் அங்­குள்ள மக்­க­ளையும் சந்­தித்து உரை­யா­டினார்.
நேற்று மாலை 3.30 மணி­ய­ளவில் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­தி­ருந்த அவர் சண்­டி­லிப்பாய் பிர­தேச செய­லக பிரிவின் கீழுள்ள கல்­லுண்டாய் வெ ளியில் வடக்கு அபி­வி­ருத்தி அமைச்­சினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற வீட்­டுத்­திட்­டத்தை பார்­வை­யிட்டார்.

Advertisement

பிர­தம­ருடன் கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் மற்றும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­திரன், சி.சிறீ­தரன்,ஈ.சர­வ­ண­பவன் ,த. சித்­தார்த்தன் சிவ­மோகன் மற்றும் வடக்கு மாகாண சபையின் அவைத்­த­லைவர் சி.வி.கே.சிவ­ஞானம், யாழ். மாந­க­ர­சபை முதல்வர் இம்­மா­னுவல் ஆனோல்ட் , வலி­காமம் தென்­மேற்கு பிர­தேச சபையின் தவி­சாளர் ஜெப­நேசன் வலி­காமம் மேற்கு பிர­தேச சபை தவி­சாளர் நட­னேந்­திரன் உறுப்­பி­னர்கள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் அப்­ப­குதி பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்­டனர்.

இதனைத் தொடர்ந்து மானிப்பாய் மற்றும் தெல்­லிப்­பளை, பருத்­தித்­துறை சாவ­கச்­சேரிப் பகு­தி­க­ளுக்கும் சென்று , பிரதமர் கலந்துரையாடலைமேற்கொண்டிருந்தார். மேலும் இன்று யாழ். சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது