1ஆம் திகதி முதல் யாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகள் சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வழக்கமான பயணிகள் விமான சேவை வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் இடம்பெறும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து வரும், முதல் விமானம் இன்று காலை பலாலியில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

Advertisement

எனினும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கும் சென்னை விமான நிலையத்துக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை, நவம்பர் 1ஆம் திகதியில் இருந்தே ஆரம்பமாகும் என்றும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதற்கு முன்னர், வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது