Home உள்ளூர் செய்தி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பெருமளவில் இனவாத மோதல்கள் நாட்டில்!

தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பெருமளவில் இனவாத மோதல்கள் நாட்டில்!

இராணுவ கலாசாரத்தை பின்பற்றிய ஒருவர் ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது மிகவும் கடினமான ஓர் விடயமென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வஜிர அபேவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பெருமளவில் இனவாத மோதல்கள் ஏற்பட்டன.

இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆற்றிய சேவையை எம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. எனவே சஜித் அரசாங்கத்தில் அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது.

அந்தவகையில் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.