தோல்விக்கு காரணம் இவர்கள் செய்த தவறு தான்.. இலங்கை அணித்தலைவர் மலிங்கா

பிரிஸ்பேனில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் மற்றொரு படுதோல்வியை தொடர்ந்து, இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாடும் விதம் தொடர்பில் அணித்தலைவர் மலிங்கா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது போட்டியிலும் படுதோல்வியடைந்தின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை அவுஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது இலங்கை.

Advertisement

போட்டிக்கு பின் இலங்கை அணித்தலைவர் மலிங்கா கூறியதாவது, அவுஸ்திரேலியா மிகவும் வலுவான அணி, அவர்கள் துடுப்பாட்ட வரிசை மிகவும் பலம் வாய்ந்தது, நாங்கள் நிர்ணயித்த வெற்றி இலக்கு போதுமானதாக இல்லை.

நாங்கள் நினைத்த அளவு ஓட்டங்களை எடுக்கவில்லை, துடுப்பாட்டகாரர்கள் இன்னும் பொறுப்புடன் விளையாட வேண்டும். துடுப்பாடும் விதம் சிறந்ததாக இல்லை மற்றும் நடுவரிசையில் சிறப்பான ஜோடி அமையவில்லை. சூழலுக்கு ஏற்றவாறு நாங்கள் துடுப்பாடவில்லை.

முதல் 7 துடுப்பாட்டகாரர்களே 20 ஓவர் வரை விளையாடி இருக்க வேண்டும், நாங்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும்.

எனினும், இதை 2020-ல் அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி-20 உலகக் கோப்பைக்கான ஆயுத்தமாக இலங்கை அணி பார்க்கிறது. இதுபோன்று சூழ்நிலையில் நாங்கள் எங்களை சோதித்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து போட்டியில் கட்டாய வெற்றிப்பெற வேண்டும், அப்போது தான் இளம் வீரர்கள் அடங்கிய இலங்கை அணிக்கு நம்பிக்கை ஏற்படும் என மலிங்கா தெரிவித்தார்.