திருகோணமலையில் 16 மற்றும் 18 வயதான பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சப்பாதித்த 30 வயதுடைய பெண்!

திருகோணமலையில் இளம் யுவதிகளை தொழில் பெற்றுத்தருவதாக கூறி 16 மற்றும் 18 வயதான பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜபடுத்தியபோது அவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

திருகோணமலையில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி நிலாவெளி பகுதியில் இருந்து அழைத்து வந்த பெண் இரு யுவதிகளையும் தனது வீட்டில் வைத்துக்கொண்டு ஐ எம் ஓ மற்றும் வாட்ஸ் அப் மூலமாக ஆண்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் திருகோணமலை தலைமையக பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பகுதி கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இரு யுவதிகளும் , குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிரதான சந்தேக நபரையும், மற்றைய 18 வயதுடைய யுவதியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் மற்றைய 16 வயது 4 மாதம் உடைய யுவதியை சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை- பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலை நகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த முதலாவது விபச்சார தொழில் இது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இச் செயற்பாட்டிற்கு உதவி வழங்கியவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.