கனடாவில் வீடொன்றில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது 6 பேர் கத்தியால் குத்தப்பட்ட இரத்த வெள்ளத்தில்!

கனடாவில் வீடொன்றில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது 6 பேர் கத்தியால் குத்தப்பட்ட இரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டோரண்டோ, மாடிசன் அவென்யூ பகுதியில் உள்ள வீட்டில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது இரவு 11:40 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து டோரண்டோ பொலிசார் கூறியதாவது, முன்னதாக, வீட்டில் கொண்டாட்டத்தின் போது மோதல் ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

உடனே சம்பவயிடத்திற்கு விரைந்து வீட்டில் சோதனை செய்தோம், அப்போது, மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்திருந்தனர். மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்ந்து நடந்த சோதனையில் வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட பாதிப்பிற்குள்ளாகி இருந்த மேலும் இருவர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு சம்பவயிடத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர், 35 நிமிடங்களுக்கு பிறகு சம்பவயிடத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதில், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், தாக்குதல் தொடர்பில் 18 வயது முதல் 20 வயதுடைய இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக டோரண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.