றக்பி உலகக் கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் வேல்ஸ் அணி படுதோல்வி!

ஜப்பானில் நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இத் தொடரின் மூன்றாம் இடத்தை தெரிவுசெய்வதற்கான போட்டி இன்றைய தினம் நடைபெற்றது.

அதன்படி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு டோக்கியோ மைதானத்தில் வேல்ஸ் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

Advertisement

இப் போட்டியில் நியூஸிலாந்து அணி 40:17 என்ற கணக்கில் வேல்ஸ்ஸை தோற்கடித்து மூன்றாம் இடத்தை பெற்றது.

இந் நிலையில் நாளைய தினம் யோகோஹாமாவில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.