வவுனியா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டஉண்டியல் உடைத்து பணம் திருட்டு!

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்ட உண்டியல் உடைத்து அதிலிருந்த பெருமளவு பணத்தை நேற்று திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இன்று அதிகாலை 5மணியளவில் ஆலயத்தினைத் திறந்து பாடல் ஒளிபரப்புவதற்காகச் ஆலயத்திற்குச் சென்ற ஆலய நிர்வாகப் பொருலாளர் ஆலயத்திலுள்ள உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதுடன் ஆலயத்தலைவர் மற்றும் செயலாளருக்கு குறித்த தகவல் வழங்கியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் இவ்வியடம் குறித்து ஆலயத்தலைவரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளது. இதனால் கோவிலுள்ள உண்டியலுக்கு பெருமளவு பணம் சேர்ந்திருந்துள்ளதை அவதானித்த திருடர்கள் இதனை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறித்த கோவில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்துடன் மூன்று தடவைகள் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து பொலிசாருக்கு முறையிட்டும் மூன்று சம்பவங்களில் தொடர்புபட்ட திருடர்கள் எவரையும் பொலிசார் இன்றுவரையில் கைது செய்து அவர்களுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருட்டுச்சம்பவங்கள் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.