இந்தியன்2 புதிய புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் ஷூடிங் தற்போது வட இந்தியாவில் குவாலியரில் நடந்து வருகிறது. அங்கு இந்தியன் தாத்தாவின் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இன்று ஷங்கர் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் தான் இருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

Advertisement