யாழில்,வைத்தியர் ஒருவரின் வீட்டுக்கு நள்ளிரவில் தீ வைத்த விசமிகள் – மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்

நேற்று இரவு (07.11.2019) யாழ் நகரத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டுக்கு இனம்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர்.

எனினும், தீ உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் அணைக்கப்பட்டுள்ளது.

தீ யாரால் வைக்கப்பட்டது எதற்காக வைக்கப் பட்டது என்பது தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கும் பொலிசார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவித்தனர் பொலிசார்.

Advertisement

வைத்தியரின் குடும்பம் மயிரிழையில் உயிர் தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.