மூளையில் பாதிப்பு ஏற்பட்டு நடிகர் தென்னவன் மருத்துவமனையில் அனுமதி!


தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் தென்னவன். இவர் சில சீரியல்களிலும் சில ரோல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்தி வந்துள்ளது.

இது சினிமா துறையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Advertisement