பலத்த பாதுகாப்புடன் யாழில் மக்கள் மத்தியில் சஜித்!


ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வடகிழக்கு மாகாணங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டிருந்த ஜக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ யாழ்.நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இன்று மாலை நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ மற்றும் அமைச்சர்களான சரத் பொன்சேகா, மனோ கணேசன், றவூவ் ஹக்கீம், திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வழமைக்கு மாறாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உச்சக்கட்ட பாதுகாப்பிற்கு மத்தியிலேயே சஜித் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

loading