பகிரங்க விவாதத்திற்கு வந்தால் காற்சட்டை இல்லாமல் போவார்கள்!

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் பிரமுகர்களை பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்ளார் முன்னாள் எம்.பி சஜின்வாஸ் குணவர்த்தன. தன்னுடனான விவாதத்தின் முடிவில் காற்சட்டை கழன்று வெளியில் செல்பவர் யாரென பார்க்கலாமென்றும் சவால் விடுத்தார்.

இன்று அம்பலாங்கொடவில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

Advertisement

2010- 2015ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை பேச தயாராக இருக்கிறேன். ரோஹித அபேகுணவர்தன, ஷெஹான் செமசிங்க, காஞ்சனா விஜசேகர, நாமல் ராஜபக்ஷ ஆகியோரை நான் பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறேன்.

இவர்கள்தான் நான் திருடன் என சொல்கிறார்கள். அதனால் அவர்களை அழைக்கிறேன். ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக இந்த விவாதம் நடக்க வேண்டும். நான் எனக்கு தெரிந்த அனைத்தையும் சொல்கிறேன். காற்சட்டை இல்லாமல் போகிறவர் யார் என்பதை பார்க்கலாம்“ என தெரிவித்துள்ளார்.