சஜித்தின் புதிய அரசில் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்றதும் கோட்டாவை போல தண்ணீர் கேட்டவர்களை சுட்டுத்தள்ள மாட்டேன்!

சஜித்தின் புதிய அரசில் பாதகாப்பு அமைச்சை பொறுப்பேற்ற பின்னர் இராணுவத்தை வைத்து, தண்ணீர் கேட்டவர்களையும், மண்ணெண்ணெய் கேட்டவர்களையும் சுட்டுத்தள்ள மாட்டேன். உங்கள் பிள்ளைகளிற்கு பாதுகாப்பான ஒரு நாட்டை உருவாக்கித் தருவேன் என தெரிவித்துள்ளார் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (8) யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே மேற்கண்டாவறு தெரிவித்தார்.

நாங்கள் பத்து வருடங்களின் முன்னர் யாழ்ப்பாணம் வந்தபோது விசில் அடித்து அதை பகிஸ்கரித்தார்கள். இப்பொழுது உங்களை பார்க்க என் மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. முன்பு நாங்கள் பொதுமக்களுடன் கிட்ட சென்று அவர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கிட்டவில்லை. இப்பொழுது மக்களிற்கு அருகில் வந்து கலந்துரையாட மகிழ்ச்சியாக உள்ளது.

Advertisement

இந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

2019ம் ஜனாதிபதி தேர்தல் சகல மக்களிற்கும் முக்கியமானது. நாடு முழுவதும் முக்கியமான தேர்தல்.

தேர்தலை பகிஸ்கரிக்க சிலர் ஒத்துழைப்பு வழங்கலாம். அதை நீங்கள் கணக்கெடுக்காமல் நீங்கள் வாக்களிக்க வேண்டும். யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு என்று இல்லை. அனைவரையும் ஒரே தாய் மக்களாகவே பார்க்கிறோம். இனியும் இந்த நாட்டில் இப்படியான யுத்தம் நாட்டில் இடம்பெறாது. அதற்கு நாட் இடமளிக்கமாட்டோம்.

மீன்பிடி கைத்தொழில், விவசாய கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் எற்பாடுகளை சஜித் செய்து தருவார்.

இங்கே சில வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். ராஜபக்ச சகொதரர்களிடமமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, தேர்தலை திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள். உங்கள் வாக்குகளை போடாமல் செய்யவும் மயற்சிக்கிறார்கள். அதை நாங்கள் நிறுத்த வேண்டும்.

தெற்கில் ராஜபக்ச குடும்பம் மக்களை ஏமாற்றியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் விசேட செயற்பாடு பணத்தை சூறையாடி, மக்களின் பணத்தை சூறையாடும் வேலையைத்தான் செய்கிறார்கள்.

நாங்கள் ஒருபோதும் உங்களிற்கு பொய் சொல்ல மாட்டோம். இயலாததை இயலாதென்றே கூறுவோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் ஒன்றை சொல்கிறேன். வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைவரும் ஒரே தாய் பிள்ளைபளாக இருக்க விரும்புகிறேன்.

சஜித் ஜனாதிபதியானதும் எனக்கு பாதுகாப்பு, நீதியமைச்சை வழங்குவதாக சொல்லியுள்ளார். அதை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். பதவியேற்றதும் நாடு தழுவிய ரீதியில் இன,மத, பேதமின்றி, அனைவருக்கும் பாதுகாப்பளிக்கும் எற்பாட்டை நான் செய்வேன்.

நாட்டின் ஒற்றுமை, இறையை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வேன்.

ஏப்ரல் 21 பயங்கரமான தாக்குதல் நடந்தது. இனிமேல் அப்படியான தாக்குதல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.

இளைஞர்களை நல்ல வழியில் கொண்டு செல்வோம். மதுபாவனையிலிருந்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். மதுபாவனை பிரச்சனையை இரண்டு வருடங்களில் இல்லாமல் செய்வோம்.

ஊழல், மோசடிகளை இல்லாமல் செய்வோம். எந்த விதத்திலும் இராணுவத்தை வைத்துமக்களிற்கு வெடி வைக்கவோ, திசைதிருப்பவோ இடமளிக்கமாட்டேன். கோட்டாபய ராஜபக்ச ஈ.பி.எப் கேட்டவர்களையும் சுட்டார், மண்ணெண்ணெய் கேட்டவர்களையும் சுட்டார், தண்ணீர் கேட்டவர்களையும் சுட்டார். இது எமது அரசாங்கத்தில் ஒருபோதும் நடக்காது.

கோட்டாபய ராஜபக்சவின் அனைத்து விடயங்களிற்கும் முடிவு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் வழிநடத்தியவர்கள் வேறு திசைக்கு சென்றுள்ளனர். இந்த யுத்தத்தை வழிநடத்தியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் பிள்ளைகளிற்கு, இளைஞர், யுவதிகளிற்கு சரியான பாதுகாப்பை வழங்குவேன் என்றார்.